அண்ணன் சு.ப அவர்களே! ஒரு நிமிசம்…
ஏ9 பாதை உங்களுக்கு ஒரு பொன் முட்டையிடும் வாத்தாக இருந்தது. சவளால் பணத்தை அள்ளி சாக்குகளில் நிரப்பிய காட்சிகள் ஒரு கோடீஸ்வர தமிழரசு உருவாகிறதென்று இறுமாந்திருந்தோம். ஆனால் பாழாய்போன இந்த தமிழ் சனத்திற்கு அது விளங்கவில்லை. அந்த தமிழ்ச்சனம் முணுமுணுத்துக் கொண்டு புறுபுறுத்துக்கொண்டுதான் பணத்தைத் தந்தார்கள். நீங்கள் ஏ9 வீதியால் போகவிடுவதும் போதாதென்று நீங்கள் கேட்கும் பணத்தை வழங்குவதற்கு பஞ்சிப்படும் தமிழ்ச்சனத்தை என்ன செய்வது. இவர்களுக்கு எத்தனை கசையடிகள் கொடுத்தாலும் ... Read More
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்தோருக்கென 75இலட்சம் செலவு
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கென அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு 74 இலட்சத்து தொண்ணு}ராயிரம் ரூபாவினை செலவிட்டுள்ளது. என அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி தெரிவித்தார் மரணச் செலவுக்கென 13 இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவும் உலர் உணவுப்பொருளுக்கென நாற்பது இலட்சம் ரூபாவும், பொதி செய்யப்பட்ட பொருட்களுக்கென 20இலட்சம் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. திருமலை, சேருவில, தம்பலமாமம், கந்தளாய், கிண்ண்pயா, மூது}ர் ஆகிய பிரதேசங்களுக்கே ... Read More
சமாதான முன்னெடுப்புக்கு சுவிஸ் தொடர்ந்து ஆதரவு
இலங்கையின் சமாதான முனைப்புகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கத் தயாரென சுவிஸர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இரண்டு தரப்புக்களும் போர் நிறுத்த உடன்பாட்டை மதித்து செயற்பட வேண்டுமென அந்த அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ... Read More
ஜப்பான் -கண்ணிவெடிகளை அகற்ற 91 மில்லியன் ரூபா உதவி
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கென ஜப்பான் அரசாங்கம் 91மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. இது தொடர்பான உடன்படிக்கை நாளை முதலாம் திகதி காலை 11 மணிக்கு தேசத்தைக் கட்டியொழுப்புவதற்கும் அபிவிருத்திக்குமான அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்படும் 2008ம் ஆண்டு முடிவிற்குள் அனைத்து கண்ணிவெடிகளையும் அகற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் இதேவேளை கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை ப10ரண அரச முகாமைத்துவத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு 12 ... Read More
இடம்பெயர்ந்தோருக்கு நஸ்டஈடு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
துறைமுகங்கள். விமான சேவைகள் அமைச்சு 4700 மில்லியன் ரூபா செலவில் ஒலுவில் துறைமுக நிர்மாண நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான சகல முன்னோடி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். துறைமுக நிர்மாண நடவடிக்கைகளினால் இடம்பெயரவுள்ள கூமார் 850 குடும்பங்களுக்கு மாற்றுக் காணியில் வீடுகளையோ அல்லது நஸ்டஈட்டையோ வழங்குவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பான வழிகாட்டல்களையும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு வழங்கினார்.
மஹிந்த சிந்தனைக் ... Read More
காலித்தாக்குதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் புகைப்படங்கள்..
கடந்தவாரம் காலித் துறைமுகத்தினுள் தாக்குதல் நடாத்த புலிகளின் தற்கொலைதாரிகளான கரும்புலிகள் மேற்கொண்ட முயற்சி கடற்படையினரால் முறியடிக்கப்பட்டதுடன் கரும்புலிகள் உட்பட புலிகள் அமைப்பைச் சேர்ந்த பதினைந்து பேர் வரையில் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே. ஆயினும் இன்றுவரை இதுகுறித்து எந்தவித அறிவித்தலும் வெளியிடாது மௌனம் காத்து வரும் புலிகளின் தலைமைப்பீடம் தமது அமைப்புக்காக உயிர்நீத்தவர்களையும் உண்மையிலேயே நட்டாற்றில் விட்ட சம்பவத்தை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இவை....
(நீங்கள் நெஞ்சு வருத்தம் உடையவர்களோ அன்றில் ... Read More
Geneva பேச்சு வார்த்தையின் முடிவு குறித்து -ஈ.பி.டி.பி
ஏ 9 பாதையை மூடுவதற்கு வழி வகுத்ததும் புலிகளே! இன்று சுய லாபங்களுக்காக அதை திறக்குமாறு கோரிக்கை எழுப்பி சமாதானத்திற்கான பாதையை மூட நினைப்பதும் புலிகளே!! அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சு வார்த்தை சமாதானத்தை நோக்கி நகர வேண்டும் என்பதே இலங்கை தீவின் அனைத்து மக்களினதும் விருப்பங்களாகும்! சர்வதேச சமூகத்தின் விருப்பமும் இதுவே! அரசாங்கத்தின் விருப்பமும் இதுவே! புலிகள் மீதான நம்பகத்தன்மைகள் எமக்கு இல்லாதிருப்பினும் ஈ.பி.டி.பி யின் விருப்பமும் இதுவே!!
ஆனாலும் ... Read More
இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு கொழும்பு நகரில் நினைவுச்சின்னம்
இலங்கை போரில் உயிர் இழந்த இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று அதிபர் ராஜபக்சே கூறினார். ராஜீவ்காந்தி ஆட்சி காலத்தில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு விடுதலைப்புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் பலர் இறந்தனர். இவ்வாறு இறந்த இந்திய வீரர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே கூறியுள்ளார். இதுபற்றி அவர் அளித்த சிறப்பு ... Read More
நடுவானில் தீப்பிடித்தது: விமானம் விழுந்து நொறுங்கி 100 பேர் பலி
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவின் தலைநகர் அபுஜா விமான நிலையத்தில் இருந்து ஏ.டி.சி. ஏர்லைன்ஸ் விமானம் பயணி களை ஏற்றிக் கொண்டு அங் குள்ள சாக்கோட்டோ நகருக்கு புறப்பட்டு சென்றது. விமான சிப்பந்திகள், பயணிகள் உள்பட 106 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. விமானம் இதனால் கட்டுப்பாட்டை இழந்தது. விமானம் தாறுமாறாக பறந்ததுடன் அதில் தீப்பிடித்துக் கொண்டது.
தாறுமாறாக பறந்த அந்த விமானம் ... Read More
மனிதாபிமானம் பேசிக்கொண்டே சிறுவர்களை யுத்தகளத்தில் பலிகொடுக்கும் புலிகள்! -தப்பி வந்தோர் கூறும் கதை
தர்க்கீகனுக்கு இப்போது 15 வயது. உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த அவனுக்குள் எல்லா மாணர்வர்களையும் போலலே அவனது எதிர்காலம் பற்றிய பெரிய, பெரிய கனவுகள் இருந்தன. ஆனால், ஒருநாள் அவன் பலாத்காரமாக பிடித்துச்செல்லப்பட்டு எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தில் இணைக்கப்பட்ட போது.... தொடர்ந்து இக்கட்டுரையைப் படியுங்கள்!
சிறுவர்களை படையில் சேர்ப்பது, அவர்களை ஆயுதம் ஏந்த வைப்பது, யுத்த களங்களில் போரிட வைப்பது என்பதெல்லாம் பாரிய அத்துமீறலென ஐக்கிய நாடுகள் சபை முதல், அனைத்து ... Read More
கிஷோர் எம்.பி. யின் பாதுகாப்புக்கான பொலிஸார் மீது கைக்குண்டுத் தாக்குதல்!!
சிவிலியன் ஒருவரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவலொன்றின் அடிப்படையில் வவுனியா தவசிக்குளம் பகுதியில் ராணுவத்தினர் ஆயுதங்கள் சிலவற்றைக் கைப்பற்றினர் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ரீ-56 ரக துப்பாக்கியொன்று, 4 ரவைக்கூடுகள் மற்றும் 2 கைக்குண்டுகள் என்பனவே கைப்பற்றப்பட்ட ஆயுதங்களாகும். வுவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை நேற்று இரவு 10 மணியளவில் வவுனியா ரம்பைக்குளம் பிரதேசத்திலமைந்துள்ள ... Read More
நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு
வெள்ளம், மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 3இலட்சத்து 65ஆயிரமாக அதிகரித்துள்ளது. இவர்களின் உடனடித் தேவைகளின் பொருட்டு அரசாங்கம் ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கியுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கம்பஹா, புத்தளம், கொழும்பு, காலி, இரத்தினபுரி, பதுளை, கேகாலை, குருநாகல், களுத்துறை ஆகிய மாவட்டங்களே வெள்ளப்பாதிப்புக்களுக்கு இழக்காகியுள்ளன.
இந்த மாவட்டங்களில் புத்தளம், கம்பஹா மாவட்டங்களே அதிக பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய ... Read More
“ஜெனிவா சமாதானப் பேச்சில்”் இணக்கம் இல்லை
ஜெனிவாவில் நடந்த இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகளில் எந்தவிதமான இணக்கப்பாடுகளும் ஏற்படவில்லை என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளார். பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததை அடுத்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை அறிவித்தார்.முக்கிய விடயங்களில் இரு தரப்புக்கும் இடையே எந்தவிதமான இணக்கமும் ஏற்படவில்லை என்று கவலை வெளியிட்ட அமைச்சர் சொல்ஹெய்ம் ஆயினும் இரு தரப்புடனும் நோர்வே சமாதானத்துக்கான தனது முயற்சிகளைத் தொடரும் என்றும் கூறியுள்ளார்.ஏ9 பாதையை திறக்க இலங்கை அரசாங்கம் ... Read More
அக்கரைப்பற்று கிளேமோர் தாக்குதலில் மூன்று அதிரடிப்படையினர் காயம்
அக்கரைப்பற்று கல்முனை வீதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற கிளேமோர் குண்டுத் தாக்குதலில் காவல்துறை விசேட அதிரடிப்படை வீரர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அக்கரைப்பற்று எழுதுவெட்டுவான் மருத்துவமனைக்கு அருகில் நேற்றுக் காலை 10.15 மணியளவில் ரோந்தப் பணியில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையம் தெரிவித்தது.
அதிரடிப்படையினர் சென்ற ரக் வாகனமே தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது காயமடைந்த அதிரடிப்படை வீரர்களின் ஒருவரின் நிலை ஆபத்தானதாக உள்ளதாக ... Read More
சுவிஸ் nஐனீவாவில் மீண்டும் மூக்குடைபட்ட சுவிஸ்புலிகள்
சுவிசர்லாந்தில் nஐனிவா மாநிலத்தில் இலங்கை அரசும் புலிகளும் நடத்தும் பேச்சுவார்த்தை ஒரு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையாக அமையவேண்டும் என்றும் ஐனநாயகமுறையை பேணிக்காக்க வேண்டும் என்றும் மனிதஉயிர்களை மதித்து செயல்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்iவைத்து இலங்கை பிரினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான அமைப்பின் சார்பில் நேற்றையதினம் ஐக்கியநாடுகள் சபைக்கு முன்நடத்திய அமைதி ஆர்ப்பாட்டத்தில் சமாதான விரும்பிகளும் மாற்று தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதனை வழமைபோல் குழப்புதல் பயமுறுத்துதல் நோக்கத்தில் ... Read More
இலங்கை சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பமாகின
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் இலங்கை அரசாங்க தரப்புப் பிரதிநிதிகளும், விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளும் இன்று ஜெனிவாவில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். இலங்கை அரசாங்கக் குழுவுக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமை தாங்குகிறார். அதேவேளை விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாத நிலையில், அந்த அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் தமது தரப்புக்கு தலைமையேற்றிருந்தார்.
இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ... Read More
மட்டக்களப்பில் இராணுவ வீரரொருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமுற்றார்
மட்டக்களப்பு ஏறாவூர் மாவடிவேம்பு பிரதேசத்தில் இராணுவக் காவலரண் மீது இன்று பகல் இடம்பெற்ற தாக்குதலொன்றில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளர். ஒருவர் காயமடைந்துள்ளாரென இராணுவத்தரப்பு தெரிவித்துள்ளது. ... Read More
அளவெட்டியில் கிரேனேட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டது
யாழப்பாணம் அளவெட்டி பகுதியில் இராணுவத்தினர் நடத்திய தேடுதலின்போது மூன்று கிரேனேட்டுக்களை கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது ... Read More
திருகோணமலை மூது}ரில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது
திருகோணமலை மூது}ர்ப் பகுதியில் நேற்று பிற்பகல் 6.30மணியளவில் ஆயுதங்கள் சில இராணுவத்தினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரி.56 ரக துப்பாக்கிகள் ஐந்து, மெகசின்கள் 23, ரி.56க்குரிய ரவைகள் 590, கிரேனேட்டுக்கள் 02 என்பவையே கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்களாகும். இவை இல்லமொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.
... Read More
ஜனாதிபதி பணிப்பு
வடக்கு, கிழக்கில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தி உடனடியாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காவல்துறை மா அதிபரை பணித்துள்ளர். இத்தகைய தாக்குதல்களை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், மக்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலாகவே இதனைக் கருதுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனநாயகத்துக்கு எதிரான ஆயுதக் குழுக்களே இத்தகைய நடவடிக்கைகளை ... Read More









