வெளிநாட்டுச் செய்திகள்…
நான் யாருக்கும் கேர்ள் பிரெண்டு இல்லை _ மோனிகா பேடி ஆவேசம் நான் தனிகட்டை. நான் யாருக்கும் கேர்ள் பிரெண்டு இல்லை என்று பிரபல பாலிவுட் நடிகை மோனிகா பேடி கூறியுள்ளார். போலி பாஸ்போர்ட் வழக்கில் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ள நடிகை மோனிகா பேடி தாதா அபு சலிம் காதலியா? போர்ச்சுக்கள் நாட்டில் இவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய போது அந்நாட்டு போலிசாரால் பிடிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.
மோனிகா பேடி ... Read More
விண்வெளிக்கு சுற்றுலா சென்ற ஈரான் பெண் பூமிக்கு திரும்பினார்
விண்வெளியில் அமைக்கப்பட்டு உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு ரஷியா சோயுஸ் விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்தில் அமெரிக்காவில் சொந்தமாக தொழில் செய்யும் ஈரான் பெண் அனுஷ்கேக் அன்சாரி சுற்றுலா பயணியாக சென்றார். அவருடன் விண்வெளி வீரர்களும் பயணம் செய்தனர். 11 நாள் விண்வெளியில் சுற்றி வந்த அன்சாரி நேற்று பூமிக்கு திரும்பினார்.
அவருடன் ரஷிய விண்வெளி வீரர் பாவெல் வினோக்ராடோவ், அமெரிக்க விண்வெளி வீரர் ஜெப்ரி வில்லியம்ஸ் ஆகியோர் ... Read More
அதிரடிப் படையினரின் பதில் தாக்குதலில் 12 LTTE பலி!
புல்மோட்டையில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாம் மீது இன்று அதிகாலை எல்.ரீ.ரீ.ஈ. தாக்குதல் ஒன்றை மேற்கொண்டதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் படையினருக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை. அதிரடிப்படையினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 12 எல்.ரீ.ரீ.ஈ. கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ரீ. 56 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாகவும் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
... Read More
இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடரும் வன்முறை
இலங்கையின் வடக்கே வவுனியாவிலும், யாழ் குடாநாட்டிலும் அடையாளம் தெரியாத ஆயதபாணிகளினால் இன்று 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று மாலை வவுனியா கூமாங்குளம் பகுதியில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்ததாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். மொரட்டுவை பகுதியைச் சேர்ந்த இவர்கள் மரத்தளபாடங்கள் விற்பனை செய்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்றிரவு வவுனியா அனுராதபுரம் வீதியில் உழவு இயந்திரம் ஒன்றில் பயணம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ... Read More
பிரேசில் நாட்டில் 2 விமானங்கள் நடுவானில் மோதல்: 155 பயணிகள் கதி என்ன?
பிரேசில் நாட்டின் கோல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஜெட்விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மனாஸ் நகரில் இருந்து புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 155 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பரா மாநிலத்தில் உள்ள சீரா டி.கேக்சிம்போ பகுதிக்கு மேலே சென்று கொண்டிருந்த போது வானிலை மிகவும் மோசமாக இருந்தது.
அப்போது அந்த ஜெட் விமானம் இன்னொரு விமானம் மீது மோதியது. இதில் இன்னொரு விமானம் நிலை தடுமாறியது. அந்த விமானத்தை விமானி ... Read More
புலிகள்தான் முஸ்லிம்களைக் கொன்றனர்!..
பொத்துவில் பிரதேசத்தில் 10 முஸ்லிம்களை எல்.ரீ.ரீ.ஈ. வெட்டிப்படுகொலை செய்தனர் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. படுகொலை சம்பவத்தில் உயிர் தப்பியவரான மீராமுகைதீன் என்பவர் இதுதொடர்பாக மிகவும் உறுதியான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அம்பாறை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இவரை அமைச்சர் அதாஉல்லாஹ் சுகம் விசாரிக்கச் சென்ற சமயம் படுகொலைச் சம்பவம் தொடர்பான தகவல்களை மீராமுகைதீன் இவ்வாறு தெரிவித்தார்.
சம்பவ தினம் எனது முதலாளியான மஜீது போடியாரின் வேண்டுகோளுக்கிணங்க குறித்த இடத்தில் குளம் ... Read More
சனநாயகத்திற்கு கிடைத்தபெருமை
திரு. ஆனந்தசங்கரி அவர்கட்டு யுனஸ்கோ அமைப்பினால் வழங்கப்பட்ட உயர் விருதான “மதன்ஐpற்சிங்“ மீதான Nஐர்மனி. இலங்கையர் ஐனநாயக முன்னணியின் பார்வை திரு.ஆனந்தசங்கரி அவர்கட்கு கிடைத்த இந்த உயர் விருதானது இவர் ஐனநாயகத்தின் மேல் கொண்ட பற்றுதிக்கும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சமாதானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கும் சமஷ்டி முறையான தீர்வே சிறந்தது என்ற நம்பிக்கையுடன் இந்த முதிய வயதிலும் உறுதியுடனும் தளராது எத்தனையோ இன்னல்களுக்கும் அச்சுறுத்தலுக்கும் முகம்கொடுத்து...
புலிகள் தமிழர் ... Read More
`திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க’ ஜெயலலிதா அறிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தார். அப்போது தேர்தலில் போட்டியிட 9 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 2 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் வெற்றிபெற்றது. அதன்பின்னர் தொடர்ந்து அ.தி.மு.க. நடத்திய 2 போராட்டங்களிலும், தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
தி.மு.க.வுடன்
இதற்கிடையே நேற்று முன்தினம் திடீர் என்று அறிவாலயம் சென்று முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து தி.மு.க. கூட்டணியில் தொல்.திருமாவளவன் சேர்ந்தார். இந்த திடீர் முடிவு குறித்து ... Read More
இலங்கையில் இரு தரப்பு யுத்த நிறுத்த மீறல்கள்
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் மாத்திரம் சுமார் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள், இந்த சம்பவங்களுக்கு இரு தரப்புமே பொறுப்பு என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 22 திகதி விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்த மாவிலாறு அணைக்கட்டுக் கதவுகளை மூடியதனைத் தொடர்ந்து அரச படைகளிற்கும், விடுதலைப்புலிகளிற்கும் இடையே வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த இரண்டு மாதமாக இடம்பெற்ற மோதல்களின் போது மாத்திரம் சுமார் 200 ... Read More
விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் முகாம் நிர்மூலம் ஆயுதக் கிடங்கும் தீப்பற்றியது !
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கிபீர் குண்டு வீச்சுவிமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் பெருந்தொகையான எல்.ரீ.ரீ.ஈ. உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத்சமரசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: புதுக்குடியிருப்பு நந்திக்கடல் ஏரிப் பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் எல்.ரீ.ரீ.ஈ. யினரின் முக்கிய முகாம் மற்றும் ஆயுதக் களஞ்சியம் முற்றுமுழுதாக அழித்தொழிக்கப்பட்டன. புலிகளின் முகாம் எரிந்து சாம்பலாகியது. இதன் போது ... Read More
சட்டவிரோத கடற் பிரயாணங்களில் ஈடுபட வேண்டாமென…
சட்டவிரோத கடற்பயணங்களில் ஈடுபடவேண்டாமென கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் டி.பி.கே. தசநாயக்க வடக்கு கிழக்கு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னார் பேசாலையிலிருந்து 153 பொதுமக்கள் சட்டவிரோதமாக ~டெல்ப்ட்| தீவுக்கு வந்துள்ளனர். இங்கிருந்து போக்குவரத்துச் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தனியார் வானொலி மூலம் தகவல் கிடைத்ததாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.வானொலிச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று பொதுமக்களுக்கு விளக்கிக் கூறிய கடற்படையினர் அவர்களை பொலிஸாரின் உதவியுடன் சொந்த இடங்களுக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர்.
வடக்கு ... Read More
அதிமுக கூட்டணி டமார்!!: திமுகவில் திருமாவளவன்
அதிமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகிவிட்டது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் திமுக கூட்டணியில் இணைந்தார். உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீடு தொடர்பாக அதிமுகவுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக திருமாவளவன் விலகியுள்ளார். முதலில் திமுக கூட்டணியில் இருந்த திருமாவளவன், 2001 தேர்தலில் வென்று எம்எல்ஏவானார். ஆனால், பின்னர் திமுக கூட்டணியை விட்டு விலகியபோது தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இந் நிலையில் கடந்த ... Read More
இலங்கை அரசுடன் பேச பிரபாகரன் ஒப்புதல்
இலங்கையில் அமைதிப் பேச்சை மீண்டும் தொடர புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக இலங்கை திட்ட அமைச்சர் கெஹலிய ரம்பூக்வெல கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில், நின்றுபோன அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர இலங்கை அரசு தயாராக இருக்கிறது என்று அதிபர் மகிந்த ராஜபட்சய அண்மையில் கூறியிருந்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் புலிகளின் அரசியல் பிரிவு ஆலோசகர் ... Read More
ஈழத் தமிழருக்கு மத்திய அரசு துரோகமிழைத்துவிட்டதாக குற்றம் சாட்டும் புலிகளின் எழிலன்
இலங்கைத் தமிழ் மக்கள் அனைவரினதும் ஏகோபித்த தெரிவில் பாராளுமன்றம் சென்ற கூட்டமைப்பினரைப் புறக்கணித்து விட்டு, ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் இலங்கை அரசுடன் இணைந்துள்ளவர்களைச் சந்திக்க வருமாறு அழைத்ததின் மூலம் இந்தியா மீண்டும் ஈழத் தமிழர்களுக்குப் பெரும் துரோகம் இழைத்ததுடன், தவறும் இழைக்கின்றதென புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு இன்று தமிழகம் பேராதரவை வழங்கி வருகின்ற அதேநேரம், இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான போக்கு ... Read More
அதிகாரிகள் அகதி முகாம்களுக்கு விஜயம்
கிண்ணியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதிகளுக்கு தொடர்ந்தும் வாழ்வுப் பணிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் நேற்று அரசாங்க அதிகாரிகள் மற்றும் கண்காணிப்புக் குழுவின் பிரதிநிதிகள் நலன்புரி நிலையங்களுக்கு விஜயம் செய்து அகதிகளின் குறைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்தும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அகதிகளுடன் உரையாடிய அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
கிண்ணியா அல்-அக்சா ம.வி, அல்-ஹிறா ம.வியில் தங்கியிருக்கும் சுமார் 450 அகதிக் குடும்பங்கள் ... Read More
உயிரோடு இருக்கிறார் பின்லேடன்: நலமாகவும் இருக்கிறார் _ தலிபான் இயக்கம்
சர்வதேச அல் கொய்தா இயக்க தலைவருமான ஒசாமா பின்லேடன் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் உள்ளார் என ஆப்கனில் உள்ள தலிபான் இயக்கத்தினர் அரேபிய டி.வி., சேனலுக்கு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையே கதிகலக்கிய பின்லேடன் டைபாய்டு காய்ச்சலுக்கு பலியாகி விட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. பிரான்ஸில் உள்ள பத்திரிகை ஒன்று இத்தகவலை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்லேடன் இறந்து விட்டதாக செய்தி வருவதும் பிறகு அதை தீவிரவாதிகள் ... Read More
‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்னை சந்திக்க நேரம் கேட்கவில்லை’ -கருணாநிதி
இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தன்னைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கூறியுள்ளார். கடந்த சிலவாரங்களாகவே இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று, தமிழக தலைநகர் சென்னையில் தங்கி தமிழக முதல்வர் மு.கருணாநிதியை சந்திக்க முயன்று வருவதாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்தத் தகவலை தமிழ்தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேட்டிகளில் தெரிவித்திருந்தனர். ... Read More
தாய்லாந்தில் முன்னாள் ராணுவ அதிகாரியை பிரதமராக நியமிக்க ஆட்சியாளர்கள் திட்டம்?
பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட தக்ஷின் ஷினவத்ராவுக்குப் பதிலாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரை பிரதமர் பதவிக்கு நியமிக்க தாய்லாந்து ராணுவ ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தாற்காலிக அடிப்படையில் புதிய வரைவு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இடைக்கால அரசு நிறுவப்பட்டாலும், அவர்களுக்கு ஆலோசனை கூற ராணுவ கவுன்சில் தொடர்ந்து செயல்பட்டு வரும் என்றும் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
தாய்லாந்தில் கடந்த செப். 19-ம் தேதி ஜெனரல் சோந்தி தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு ... Read More
இந்தியாவைப் போல கூட்டாட்சி முறையே பிரச்சினைக்கு தீர்வு: தலைவர் ஆனந்தசங்கரி
இந்தியாவைப் போல கூட்டாட்சி முறை அளிப்பதே இலங்கைப் பிரச்சினைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று இலங்கை தமிழர் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து பேர், கடந்த வாரம் தில்லி வந்து சென்ற நிலையில், புலிகளைக் கடுமையாக எதிர்க்கும் தமிழ் அமைப்புக்களான தமிழ் ... Read More
ராஜீவ் கனவு இன்னும் நனவாகவில்லை: இலங்கைத் தமிழர் தலைவர் வேதனை
இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும், மரியாதையாகவும் வாழும் நிலை உருவாக வேண்டும் என்ற ராஜீவ் காந்தியின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று கவலை வெளியிட்டார் இலங்கை தமிழ் ஈழ மக்கள் விடுதலை முன்னணியின் (பிளாட்) தலைவர் டி. சித்தார்த்தன். தில்லியில் அமைதி மற்றும் முரண்பாடுகள் ஆய்வு மையத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார். விவரம்:
இலங்கையில் இந்திய ராணுவ வீரர்கள் 1,500 பேர் உயிர்த் தியாகம் ... Read More









