மன்னாரில் கைதான 10 பேரும் விடுதலை
மன்னார் வங்காளைப்பாடு பகுதியில் கடற்படையினரால் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்ட 10பேரும் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் காலை 11.15 மணியளவில் மன்னார் தலைமன்னார் வீதியில் வங்காலைப்பாடு பகுதியில் கடற்படையினர் மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதலையடுத்து இந்தப் 10 பேரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள் மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனா.; இதேநேரம் மனித உரிமைகள் ஆணைக்குழு, சகவாழ்வு மன்றம் ஆகியவற்றின் தலையீட்டின் பின் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ... Read More
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற 9900பேர் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனா
யாழ் குடாநாட்டுக்குக் கடமைகளுக்காகவும் சொந்தத் தேவைகளுக்காகவும் சென்று, எல்.ரீ.ரீ.ஈ. யினரின் தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாத நிலையிலுள்ளவர்கள், அரசாங்கத்தின் ஆலோசனைக்கு இணங்க தங்களது பெயர்களைப் பிரதேசச் செயலகங்களிலும,; மாவட்டக் காரியாலயங்களிலும் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 9900 பேர் தமது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர் என்று யாழ். அரசாங்க அதிபர் கே. கணேஷ் தெரிவித்தார்.
இவ்வாறு பதிவு செய்தவர்களில், விடுமுறையில் சென்ற அரச ஊழியர்கள், தென் பகுதியிலிருந்து யாழ். ... Read More
வன்னிப்புலி உறுப்பினர்களை -ரிஎம்விபி செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு
கருணாஅம்மான் தலைமையிலான தமிழீழமக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) கிழக்குமாகாண அரசியல் தலைமைக் செயலகமான மீனகத்தில் நேற்றுகாலை (30.08.2006) 11.15மணியளவில் வன்னிப்புலி அமைப்பிலிருந்து சரணாகதி அடைந்த ஜந்து வன்னிப்புலி உறுப்பினர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள், யுனிசெப் பிரதிநிதிகள், மனிதஉரிமை ஆணைக்குழு பிரதிநிதிகள் முன்னிலையில் மீனகம் பிரதிநிதிகளினால் ஜந்து வன்னிப்புலிகளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரின் பிரதிநிதி மாசலிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஒப்படைக்கப்பட்ட இவர்கள், சிவம் பரனிதரன்(வயது 27) ஜானசேகரம் கஜேந்திரன்(வயது 19) ... Read More
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் வெறிச்செயல்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாமிய மத குருவையும், அகதி ஒருவரையும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்காக உளவுபார்த்ததாக சந்தேகத்தின் பேரில், தீவிரவாதிகள் இவர்களைக் கொன்றதாகப் பெயர் வெளியிட விரும்பாத புலனாய்வுப் பிரிவு அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடக்கு வாஜிரிஸ்தான் பழங்குடிப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தின் சாலையில் தலையற்ற உடல் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. உடலுக்கு அருகிலேயே அதன் ... Read More
‘ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை’ அமெரிக்கா இன்று சோதனை
ஏவுகணைகளை வானிலேயே எதிர் கெண்டு தகர்த்து அழிக்கும் ஏவுகணை சோதனையை இன்று பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்கா சோதனையிடவுள்ளது. மிசைல் டிபென்ஸ் என்ற அதி நவீன பிரமாண்டமான பாதுகாப்புத் திட்டத்தை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. எதிரி நாட்டு ஏவுகணைகளை வான் பகுதியேயே தடுத்து சிதறச் செய்யும் திட்டம் இது. செயற்கைக் கோள்கள், விமானங்கள், நீர்மூழ்கிகள், கப்பல்கள், ரேடார்கள் உதவியோடு எதிரி நாட்டு ஏவுகணைகளை வானில் தடுத்து தகர்க்கும் தொழில்நுட்பம் இது.
இந்த ... Read More
ஈராக் நாட்டில் 24 பேர் பலி
ஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் ஷூர்ஜா மார்க்கெட்டில் சாலையோரத்தில் கிடந்த குண்டு வெடித்ததில் 24பேர் பலியானார்கள். 35 பேர் காயம் அடைந்தனர். மார்க்கெட்டுக்கு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளின் ஜன்னல்கள் இந்த குண்டு வெடிப்பில் அதிர்ந்தன. இந்த சம்பவம் பகல் 11.30 மணிக்கு நடந்தது.
இது நடப்பதற்கு 2 மணி நேரத்துக்கு முன்புதான் ஹில்லா என்ற நகரில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் மையத்தில் தீவிரவாதிகள் குண்டு வைத்து தாக்குதல் நடத்தினர். ... Read More
யாழ்ப்பாணத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்…
வட பகுதி மக்களுக்காக அரசாங்கத்தினால் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே. கணேசலிங்கம் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் மொத்தம் 21 கூட்டுறவுச் சங்கக் கிளைகள் உள்ளன. இவைகளினு}டாக முதலில் அரிசியும் அதைத் தொடர்ந்து ஏனைய உணவுப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சகல குடும்பங்களுக்கும் அத்தியவசிய உணவுப் ... Read More
மகரகமவில் தமிழ் இளைஞர் யுவதிகள் கைது
கொழும்பு மகரகமவில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பெண்கள் உட்பட 10தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகரகமை புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கும் இளைஞர் சேவைகள் மன்றத் தலைமை அலுவலகத்திற்கும் இடைப்பட்ட நாவின்ன காட்சியறையொன்றில் பொருட்களை வாங்கச் சென்றவர்களே கைதானவர்களாவர்.
மகரகமவில் தமிழர்களின் அநாவசிய நடமாட்டங்கள் காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பொன்றையடுத்தே காவல்துறையினர் இவர்களைக் கைதுசெய்ததாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகரமக காவல்துறையினர் இவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
... Read More
வவுனியாவில் 16 புலிகள் பலி
வவுனியா பூவரசங்குளத்தில் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 16 புலிகள் இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுகாலை 6.15 மணியளவில் பூவரசங்குளம் படையினரின் முன்னரங்க நிலைகளை நோக்கி புலிகள் தாக்குதலைத் தொடுத்த சமயம் படையினர் திருப்பித் தாக்கியதில் 16 புலிகள் கொல்லப்பட்டதுடன் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ரி-56 துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 16 பேரை தாங்கள் சுட்டுக் கொன்றுள்ளதாகவும், அவர்களின் ... Read More
அமெரிக்காவை மிரட்டும் புதிய புயல்
அமெரிக்காவை மிரட்டும் புதிய புயல்: 1 லட்சம் பேர் வெளியேற்றம்; அட்லாண்டிஸ் ராக்கெட் வேறு இடத்துக்கு மாற்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை புயல் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இப்போது கிïபாவை தாக்கிவிட்டு ஒரு புதிய புயல் அமெரிக்காவை நோக்கி வருகிறது. `எர்னெஸ்டோ' என்ற இந்த புதிய புயல் புளோரிடாவின் தெற்கு கடற்கரை பகுதிகளை நோக்கி வருகிறது.
புயல் நெருங்கியதை தொடர்ந்து புளோரிடாவில் தாழ்வான பகுதிகளிலும் ... Read More
ஈராக்கில் எண்ணை குழாய் வெடித்ததில் 15 பேர் பலி
ஈராக் நாட்டில் திவானியா என்ற இடத்தில் பெட்ரோல் குழாய் வெடித்ததில் 15 பேர் பலியானார்கள். பயன்படுத்தப்படாத பெட்ரோல் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் மூலம் வெளியாகும் பெட்ரோலை சிலர் சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் 15 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்துக்கும், தீவிரவாதத்துக்கும் தொடர்பு இல்லை என்று கூறப்படுகிறது.
... Read More
மூது}ர் கொடூரத்துக்கு முழுப்பொறுப்பும் புலிகளே! -ரவூப் ஹக்கீம்
மூது}ரில் மக்களைத் தாக்கி அவர்களை வெளியேற்றிய முழுப் பழியும் எல்.ரீ.ரீ.ஈ.யினரையே சாரும். அவர்கள் முஸ்லிம்கள் மீது மோசமானதொரு பயங்கரவாதத்தினைப் புரிந்துள்ளனர் என்று சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது, பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறினார்.
பெண்கள், குழந்தைகள் உட்பட நு}ற்றுக்கும் அதிகமான அப்பாவி முஸ்லிம் மக்களை எல்.ரீ.ரீ.ஈ.யினர் சமீபகால நிகழ்வுகளின் போது கொடூரமாகக் கொன்றுள்ளனர். ... Read More
காணாமற் போன செய்தியாளர் தெகிவளையில் கண்டு பிடிக்கப்பட்டார்
நேற்றுக் காலை முதல் காணாமற் போயிருந்த சூரியன் எப்..எம். செய்தி முகாமையாளரான திரு. நடராஜா குருபரன் .இன்று அதிகாலை கண் கட்டப்பட்ட நிலையில் தெகிவளைக்கு அருகே கண்டு பிடிக்கப்பட்டார். தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மையம் இதனை அறிவித்துள்ளது. பிரபல செய்தியாளரான குருபரன் நேற்றுக் காலை காணாமற் போய்விட்டதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
கல்கிசையிலிருந்து அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தபோதே அவர் காணாமற் போனதாகப் பொலிசார் தெரிவித்தனர். அவர் சென்ற வாகனம் பிந்தலிய ... Read More
லெபனானுக்கு ஒரு வாரத்துக்குள் சர்வதேச அமைதிப்படை: கோஃபி அன்னான்
சர்வதேச அமைதிப்படை ஒரு வாரத்துக்குள் லெபனானுக்கு அனுப்பப்படும் என்று இஸ்ரேல் பிரதமரிடம் ஐநா பொதுச் செயலர் கோஃபி அன்னான் உறுதியளித்துள்ளார். அண்மையில் லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஐநா சபையின் தலையீட்டினால் நிறுத்தப்பட்டது. இஸ்ரேலை ஒட்டியுள்ள லெபனானின் தெற்குப் பகுதி எல்லையை கண்காணிக்க 15 ஆயிரம் அமைதிப்படையினர் அப்பகுதிக்கு அனுப்பப்படுவார்கள் என்று ஐநா உறுதி கூறியிருந்தது.
இதுகுறித்து கோஃபி அன்னானுடன் இஸ்ரேல் பிரதமர் எஹூத் ஓல்மெர்ட் தொலைபேசியில் உரையாடியதாக ... Read More
பேச்சுவார்த்தைக்கான கதவுகள் இன்னும் திறந்தே இருக்கின்றன- அமைச்சர் மங்கள
எல்.ரீ.ரீ.ஈ. யினர் பயங்கரவாதத்தைக் கைவிட்டு நிபந்தனைகளை முன்வைக்காது சமாதான மேசைக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசுக்கு இன்னும் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
பாராளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்தும் கூறுகையில் :
எல்.ரீ.ரீ.ஈ. யினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று கடந்த ஜனாதிபதித் தேர்தலிலிருந்தே அரசு எதிர்பார்த்தது. ஆனால், ஜனாதிபதித் தேர்தல் முடிவுற்று சில தினங்களுக்குள் எல்.ரீ.ரீ.ஈ. யினர் ... Read More
யுஎஸ்இன்னொரு விமான விபத்தில் 7 பேர் பலி
அமெரிக்காவில் மேலும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி 7 பேர் உயிரிழந்தனர். அமெரிக்க விமானங்களை தீவிரவாதிகள் தாக்கலாம் என்ற பீதி நிலவி வரும் நிலையில் நேற்றுமுன்தினம் கென்டகி மாநிலம் லெக்ஸிங்டன் விமான நிலையத்தில் பயணிகள விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 49 பேர் பலியாயினர். நீளம் குறைவான, தவறான ரன் வேயில் இருந்தி விமானம் கிளம்பியதால் அந்த விபத்து ஏற்பட்டது.
இந் நிலையில் கென்டகி மாநலத்தில் மீண்டும் ஒருவிமான விபத்து நடந்துளளது. தென் கிழக்கு ... Read More
ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதல்; 40 பேர் பலி
ஈராக்கில் தீவிரவாதிகள் நேற்று பல இடங்களில் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினார்கள். உள்துறை அலுவலகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் கார் குண்டை வெடிக்க செய்தான். இதில் 16 பேர் பலியானார்கள். அதே போல தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 8 அமெரிக்க வீரர்கள் உயிர் இழந்தனர். இது போல பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடந் தன. ஒரே நாளில் 40 பேர் பலியானார்கள். ... Read More
சம்பூரில் எல்.ரீ.ரீ.ஈ. யினரின் தாக்குதல் முறியடிப்பு
சம்பூர் பிரதேசத்திலிருந்து இராணுவ பாதுகாப்பு முன்னரங்குகள் மீது எல்.ரீ.ரீ.ஈ. யினர் நேற்று முதல் இன்று (29) வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் இத்தாக்குதல்களைப் பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக முறியடித்து வருவதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
திருகோணமலை தெற்குப் பிரதேசத்திலுள்ள சம்பூர் நகர் இராணுவ முன்னரங்கின் மீது எல்.ரீ.ரீ.ஈ. யினர் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தினர். ... Read More
கூடிய அதிகாரத்துடனான மாகாண சபை ஆட்சியே…-EPDP டக்ளஸ் தேவானந்தா
வடக்கு கிழக்குப் பிரச்சினையை யுத்தத்தினால் தீர்க்க முடியாது. அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தின் மூலமே அதனைத் தீர்;க்க முடியும். நாம் தமிழ் மக்களின் சார்பாக ஒரு தீர்வுத் திட்;டத்தைச் சர்வகட்சி மாநாட்டின் ஆலோசனைக் குழுவுக்கு முன்வைத்திருக்கிறோம் என சமூக சேவைகள் மற்றும் சமூக நல அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கும் விசேட ... Read More
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாட்டவர் வெளியேற்றம்
யாழ்ப்பாணம் பகுதியில் கடும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால் அங்கிருந்து வெளிநாட்டுக்காரர்கள் கப்பலில் திரிகோணமலை சென்றனர். இலங்கையில் திரிகோணமலை பகுதியில் உள்ள மாவிலாறு அணை பிரச்சினை தொடர்பாக விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் அங்கு பெரும் போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.
யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் முயற்சியில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அந்த பகுதியில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ... Read More






