சவுதிஅரேபியாவில் இந்தியப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை சிறைப்பிடிப்பு
சவுதி அரேபியாவில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இந்தியப்பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்தது. பிரசவத்துக்கு மருத்துவச்செலவாக 5 லட்சத்து 83 ஆயிரத்து 250 ரூபாய் ஆனது. இந்தப்பணத்தை அவரால் கட்ட முடியாததால் அவரது குழந்தையை ஆஸ்பத்திரி நிர்வாகம் பணயக்கைதியாக பிடித்து வைத்து உள்ளது. பணத்தைக்கட்டி விட்டு குழந்தையை பெற்றுக்கொள்ளும்படி ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறி உள்ளது.
எலக்ட்ரிஷியன் வேலை
சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் வசிப்பவர் பிரசாத். இந்தியரான அவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு ... Read More
மாவிலாறை நோக்கிய படையினரின் நகர்வு
திருகோணமலை மாவிலாறு நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். கல்லாறிலிருந்து இருமுனைகளில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் பெருமெடுப்பில் படையினர் நகர்வை தொடங்கியுள்ளனர். மங்கிபிரிட்ஜ் தளத்திலிருந்து தரைப்படையினர் ஆட்டிலெறி எறிகணைத் தாக்குதலை நடத்த, விமானப்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக விமானங்கள் தாக்குதல்களை நடத்த தரைவழியாக படையினர் தமது வலிந்த தாக்குதல் நகர்வை தொடங்கினர்.
மாவிலாறு விடுதலைப் புலிகளின் ... Read More
இலங்கை ராணுவ தாக்குதலில் 40 விடுதலைப்புலிகள் சாவு
இலங்கையில் நடந்த ராணுவ தாக்குதலில் 40 விடுதலைப்புலிகள் பலியானார்கள். இலங்கை திரிகோணமலை பகுதியில் விவசாய நீர்ப்பாசனத்துக்கு பயன்படும் ஆற்று மதகுகளை விடுதலைப்புலிகள் அடைத்து விட்டதால் ஆத்திரம் அடைந்த இலங்கை ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது கடந்த 4 நாட்களாக இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விடுதலைப்புலிகள் முகாம் மீது இலங்கை ராணுவம் சரமாரியாக குண்டுகளை ... Read More
நடிகர் சங்க தேர்தல் முடிவு சரத்குமார் அணி வெற்றி செயலாளராக ராதாரவி தேர்வு
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் முடிவுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. சரத்குமார் அணியை சேர்ந்தவர்கள், இந்த தேர்தலில் வெற்றி பெற்றனர். ராதாரவி, செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், தலைவராக சரத்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர்கள், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டி இருந்ததால், தேர்தல் நடந்தது.
துணைத்தலைவர்கள் பதவிக்கு சரத்குமார் அணியைச் சேர்ந்த நடிகர் விஜயகுமார், நடிகை மனோரமா ஆகிய இருவரும் போட்டியிட்டார்கள். செயலாளர் ... Read More
இஸ்ரேலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு: லெபனான் மீது விமான குண்டு வீச்சு நிறுத்தம்
உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து லெபனான் மீது விமான தாக்குதலை இஸ்ரேல் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் கடந்த 19 நாட்களாக விமானத்தாக்குதல் நடத்தி வந்தது. தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானங்கள் தொடர்ந்து குண்டு வீசியதில் பெய்ரூட் நகரம் பற்றி எரிந்தது. லெபனானின் முக்கிய நகரங்கள் மயான பூமியாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் தெற்கு லெபனானின் கானா கிராமத்தில் இஸ்ரேல் விமானங்கள், குடியிருப்புகள் ... Read More
இஸ்ரேல் குண்டுவீச்சில் லெபனான் கிராமம் நாசம்: 22 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் குண்டுவீச்சில் லெபனான் கிராமமே நாசமடைந்தது. இதில் 22 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்தனர். கடந்த 19 நாள்களாக நடைபெற்றுவரும் தாக்குதலில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த தாக்குதல்தான் படுமோசமான தாக்குதல் என கருதப்படுகிறது. கடந்த 12 ம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்திவருகிறது. ஹிஸ்புல்லா படையினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறிக்கொண்டாலும் லெபனான் முழுவதையுமே சின்னாபின்னமாக சிதைத்து வருகிறது.
குழந்தைகளும் அப்பாவி மக்களும் ... Read More
சீனாவில் வெடி விபத்தில் 22 பேர் சாவு 7 ஆயிரம் பேர் வெளியேற்றம்
சீனாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஷியாங் என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. ரசாயன கலவை குழாய் வெடித்ததால் தீ பிடித்துக் கொண்டது. இதில் 22 பேர் பலியானார்கள். தொழிற்சாலையின் தலைவர், பொது மேலாளர் உள்பட 28 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் குடியிருந்த சுமார் 7 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் ... Read More
கொலை வழக்கில் குத்துச்சண்டை வீரருக்கு ஆயுள் தண்டனை
இங்கிலாந்தில் கிழக்கு லண்டன் பகுதியில் வசிப்பவர் ஜர்ரி டிலானிய்(வயது 35). முன்னாள் குத்துச்சண்டை வீரர். இவர் கடந்த அக்டோபர் மாதம் டிஸ்கோ நடன ஓட்டலுக்கு சென்ற போது அவருக்கும், அங்கு வந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அது முற்றியதால் ஜர்ரி கையால், பவுல் பிரின்ஸ்(23) என்ற வாலிபரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். அதில் அந்த வாலிபர் உயிர் இழந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு ஜர்ரிக்கு ... Read More
லெபனானில் இஸ்ரேல் குண்டு வீச்சில் பொதுமக்கள் 40 பேர் பலி
இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேரை லெபனானின் ஹிஸ் புல்லா இயக்கத்தினர் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் விமா னங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 18-வது நாளாக இன்றும் தாக்குதல் நீடித்து வருகிறது. லெபனானின் தெற்கு பகு தியில் உள்ள நகரங்களில் இஸ் ரேலின் தரைப்படை பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நகரின் முக்கிய சாலை கள், பாலங்கள், தகர்க்கப் பட்டன. ஏராளமான கட்டி ... Read More
நடிகர்-நடிகைகள் ஓட்டுப்போட்டனர்; நடிகர் சங்க தேர்தலில் மோதல்-கைகலப்பு
நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் இன்று நடந்தது. தலைவராக சரத்குமார் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்து எடுக்க ஓட்டுப்பதிவு நடந்தது. தியாகராய நகர் அபிபுல்லா ரோட்டில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தில் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
நடிகர் சங்கத்தில் உறுப் பினராக உள்ள நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்- நடிகைகள் ஓட்டுப் போட்டனர். மொத்தம் 1928 ஓட்டுகளும், 595 ... Read More
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நீடிப்பு: 3 நாள் போர் நிறுத்தம் செய்ய ஐ.நா. சபை கட்டளை
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக 3 நாள் தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா.சபை கட்டளையிட்டுள்ளது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி அந்தநாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. நேற்று 18-வது நாளாக இந்த தாக்குதல் நீடித்தது. ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ... Read More
4-வது நாளாக தாக்குதல் விமானப்படை குண்டு வீச்சில் 8 விடுதலைப்புலிகள் பலி
இலங்கை விமானப்படை, 4-வது நாளாக நடத்திய குண்டு வீச்சில் விடுதலைப்புலிகள் 8 பேர் பலியானார்கள். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தாலும் இரு தரப்பிலும் அடிக்கடி தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மாவிலாறு நீர்ப்பாசன கால்வாய் மதகுகளை விடுதலைப்புலிகள் மூடியதை அடுத்து, கடந்த புதன் கிழமை இலங்கை விமானப்படை தாக்குதலை தொடங்கியது. விடுதலைப்புலிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக இலங்கை ... Read More
லெபனானனில் 130 இடங்களில் இஸ்ரேல் ஏவுகணை வீச்சு: பொதுமக்கள் 26 பேர் பலி
லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் இஸ்ரேல் 2 ராணவத்தினரை கடத்திச் சென்றதை தொடர்ந்து லெப னான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 17-வது நாளாக இந்த தாக்குதல் நீடித்து வருகிறது, நேற்று ஒரே நாளில் இஸ்ரேல் விமானங்களும் பீரங்கிகளும் லெபனானின் 130 இடஙக்ளில் குண்டு மழை பொழிந்தன. ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் முகாம்கள், ஆயுத கிடங்குகள் குறி வைத்து தாக்கப்பட்டன.
பீக்கா பள்ளத்தாக்கு, பின்ட் ஜிபிலி, மரூன் அல்ராஸ் உள்பட ... Read More
ரஷிய ராக்கெட் தரையில் விழுந்து நொறுங்கியது
ரஷிய ராக்கெட், ஏவப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து நொறுங்கியதால், அதன் மூலம் ஒரே நேரத்தில் 18 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. கஜக்ஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை தினீப்பர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் ஏவப்பட்ட சிறிது நேரத்தில், ஏவுதளத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அந்த ராக்கெட் தரையில் விழுந்து நொறுங்கியது.
... Read More
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து பின்லாந்து விலகல்
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் பணியாற்றி வந்த தனது நாட்டைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களை விலக்கிக் கொள்ளப் போவதாக பின்லாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்த பிறகு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கண்காணிப்புக் குழுவில் தொடரக் கூடாது என்ற நிபந்தனையை விடுதலைப் புலிகள் விதித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் செப்டம்பருக்குள் விலகிவிட வேண்டும் என்று விடுதலைப் புலிகள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதுகாப்பு ... Read More
உலகத் தமிழர் அமைப்பு மீது கனடிய அரசாங்கம் நடவடிக்கை
இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை கனடாவில் இயங்கிவரும் உலகத் தமிழர் அமைப்பே (W.T.M.) ஆயுதங்களைக் கொள்வனவு செய்து வழங்கி வருவதாக கனடா ஒன்ராறியோ நகரிலுள்ள நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புலன் விசாரணை அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு 58 பக்கங்களில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் புதிய அறிக்கையில் மேற்படி உலகத் தமிழர் அமைப்பின் ஏனைய செயற்பாடுகள் பற்றிய விரிவான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கனடாவின் புலனாய்வு சேவைப் பிரிவால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ... Read More
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டரை, தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினர்: 16 பேர் சாவு
ஆப்கானிஸ்தானில் ஹெலிகாப்டரை, தலிபான் தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தினார்கள். இதில் 16 பேர் இறந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து காபூலுக்கு, ஒரு கம்பெனியின் கட்டிட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு ஹெலிகாப்டர் சென்றது. அதில் 16 பேர் இருந்தனர். அவர்கள் வெளி நாடுகளை சேர்ந்தவர்கள். அந்த ஹெலிகாப்டரை தலிபான் தீவிரவாதிகள், பீரங்கியால் சுட்டு வீழ்த்தினார்கள். அந்த ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து எரிந்தது. இந்த சம்பவம் தென் கிழக்கு ஆப்கான் பகுதியில் ... Read More
இலங்கையில் மீண்டும் ராணுவம் குண்டுவீச்சு; 6 விடுதலைப்புலிகள் பலி
இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக மோதல்கள் அதிகரித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் 300-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். எந்த நேரத்திலும் போர் நிறுத்தம் வாபஸ் ஆகி பெரிய அளவில் போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை மீறி இலங்கை ராணுவ விமானங்கள்தமிழர் பகுதியில் குண்டு வீசியது.
நேற்று 2- வது நாளாக இந்த தாக்குதல் நீடித்தது. திரிகோணமலை பகுதியில் விடுதலைபுலிகளின் முகாம்கள் ... Read More
லெபனானில் நிவாரணப்பணிகளுக்கு ரூ.10 கோடி உதவி
லெபனானில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள இந்தியா ரூ. 10 கோடி வழங்கும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அந்தப் பிராந்தியம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
இரு நாடுகளுக்குமிடையிலான இந்தப் பதற்றம் பெரும் கவலையளிப்பதாக உள்ளது. குறிப்பாக லெவனானில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் ... Read More
சதாம் உசேன் மீதான வழக்கு விசாரணை முடிவுக்கு வருகிறது
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் மற்றும் 7 பேர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நடைபெற்றுவருகின்றன. இதில் மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கின் கடைசி நாள் விசாரணை, நேற்று நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணைக்கு சதாம் உசேன் வரவில்லை. முன்னாள் துணை அதிபர் ரமதான் வந்து இருந்தார். ஆனால் அவரது வக்கீல் கோர்ட்டு விசாரணையை புறக்கணித்துவிட்டார். இந்த வழக்கு முடிந்த பிறகு சதாம் உசேன் மீதான அடுத்த ... Read More



