குவைத் சட்டமன்ற தேர்தலில் பெண்கள் முதன்முறையாக வாக்களிப்பு
ஒரு பரபரப்பு திருப்பமாக குவைத் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக பெண்கள் வாக்களித்தனர். எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் இதுநாள் வரை பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்தது. மிகவும் பழமையான கட்டுப்பாட்டுக் கொள்கைகளை கொண்டு அந்த நாட்டில் தங்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று அந்நாட்டு பெண்கள் போராடி வந்தனர். இந்த தேர்தலில் மன்னர் மனம் இறங்க, பெண்கள் வாக்குரிமை பெற்றனர். 25 தொகுதிகளுக்கு 249 வேட்பாளர்கள் ... Read More
பாலஸ்தீன அமைச்சர்கள் கைது இஸ்ரேல் அதிரடி நடவடிக்கை
கடத்தப்பட்ட இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர்களை விடுதலை செய்வதற்கு பதில் நடவடிக்கையாக பாலஸ்தீனத்தின் 8 அமைச்சர்களை இஸ்ரேல் கைது செய்துள்ளது. இஸ்ரேலை சேர்ந்த ராணுவ வீரர் கிலாட் ஷாலிட் பாலஸ்தீனத்தால் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இவரை விடுதலை செய்வதற்கு பாலஸ்தீனம் பேச்சு வார்த்தை எதுவும் நடத்த முன்வரவில்லை, இதனால் எரிச்சலடைந்த இஸ்ரேல் அரசு பாலஸ்தீனத்தின் 64 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் இரவோடு இரவாக சுற்றி வளைத்து கைது செய்தது. இந்த ... Read More
மன்னார் நகரில் கடற்படை வீரர் சுட்டுக் கொலை
மன்னார் நகரப்பகுதியிலுள்ள பெரிய கடைப் பள்ளிவாசலுக்கு முன்பாகச் சென்று கொண்டிருந்த கடற்படையினர் மீது புலிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட கடற்படை வீரர் டிக்சன் கொஸ்தா (வயது 24) என்னும் களுத்துறையைச் சேர்ந்தவர் ஆகும். இச்சம்பவம் இன்று காலை 10.05 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய புலி உறுப்பினர் மீது கடற்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அவர் ... Read More
லெப்.ஜெனரல் பரமி குலதுங்க மீதான தாக்குதலை நடத்தியவர் இனம் காணப்பட்டார்.
லெப்.ஜெனரல் பரமி குலதுங்க மீதான தற்கொலைத் தாக்குதலை நடத்தியவர் சிறீலங்கா காவல் துறையினரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். கோப்பாய் வடக்கைச் சேர்ந்த ரமேஷ் சிவகுமார் எனவும் இவர் புலிகளின் தற்கொலைப் படையான கரும்புலிகசை; சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் கடந்த 7 மாதங்களாக கொடகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியில் ஈடுபட்டுள்ளார் எனவும் ஹோட்டல் உரிமையாளரின் மகன் இவருக்கு ஜா எல ... Read More
முடிவுகள் எடுக்கப்படாமல் முடிந்த ஓஸ்லோ கூட்டம்
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நடைபெற்ற நோர்ட்டிக் நாடுகளின் கூட்டத்தில் எதுவித முடிவும் எடுக்கப்படவில்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை வகிக்கும் நோர்டிக் நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பான சந்திப்பு ஒஸ்லோவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. நோர்வே வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் கண்காணிப்புக் குழு அதிகாரிகள் நிலையில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கைக்கான சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயரும் கலந்து கொண்டார். ... Read More
பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் விமான தாக்குதல்
இஸ்ரேலிய இளம் வீரர் ஒருவரை பாலஸ்தீன போராளிகள் பிணைக்கைதியாக பிடித்து வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து பாலஸ்தீனப் பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் விமானத் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 19 வயது வீரர் ஜிலாத் ஷாலித். சிலநாட்களுக்கு முன் இவரை பாலஸ்தீனப் போராளிகள் பிணைக்கைதியாக பிடித்தனர். அவரை விடுவிக்க வேண்டுமென்றால் இஸ்ரேல் சிறைகளில் உள்ள பெண்களையும், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களையும் விடுவிக்க வேண்டும் என போராளிகள் ... Read More
புலிகளின் படையில் சிறுவர்கள்: ஐ.நா. குழந்தைகள் அமைப்பு கவலை
விடுதலைப் புலிகளின் படையில் சிறுவர்கள் சேர்க்கப்படுவதற்கு ஐ.நா. குழந்தைகள் அமைப்பு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து ஆய்வு நடத்த ஐ.நா. சிறப்பு தூதர் விரைவில் இலங்கை செல்ல உள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்து ராணுவத்தை வலுப்படுத்த ஆள்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில், 18 வயதுக்கும் குறைவான சிறுவர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகின்றனர். குறிப்பாக, விடுதலைப் புலிகள் அமைப்பில் இந்த வயது சிறுவர்களை அதிக அளவில் தொடர்ந்து சேர்த்து ... Read More
கற்பிட்டி கடலில் இடம்பெற்ற மோதலில் இரு கடற்புலிகளின் படகுகள் நிர்மூலம், 12 கடற்புலிகள் பலி
கற்பிட்டிக் கடற்பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றில், கடற்புலிகளின் இரு படகுகள் தாக்கி நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன், 6 கடற்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் இன்று முற்பகல் 11.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, கடற்கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த 6 கடற்படைப் படகுகள் மீது 20 கடற்புலிப் படகுகள் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளன. எனினும் கடற்படைக் கப்பல்கள் தொடுத்த பதில் தாக்குதலில், புலிகளின் இரு ... Read More
மட்டக்களப்பு திருகோணமலை மன்னார் தாக்குதல்கள்
மட்டக்களப்பு மயிலம்பாவெளிப் பகுதியில் நேற்று (27.06.2006) இரவு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அருணகிரி நவரத்தினம் (வயது 22) முத்துக்கருப்பன் கிருஷ்ணகுமார் (வயது 21) சின்னையா மகேசன் (வயது 26) ஆகியோரே பலியாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை அன்புவெளிபுரம் பகுதியில் நேற்று (27.06.2006) இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்டார். கிருஷாந்தன் ரேணுகா ... Read More
பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தானில் ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனம் மீது வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட காரை தற்கொலைப்படையினர் மோதச்செய்தனர். இதில் 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தானில் வடக்கு வசீரிஸ்தானில் வெளிநாட்டு தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர். அங்கு இருந்து அவர்களை வெளியேற்றுவதற்காக பாகிஸ்தான் அரசு 80 ஆயிரம் ராணுவவீரர்களை அந்தப்பகுதியில் நிறுத்தி உள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் ஒரு மாதகாலத்துக்கு போர் நிறுத்தம் ... Read More
ராஜீவ் காந்தி படுகொலை; விடுதலைப்புலிகளின் மன்னிப்பை ஏற்க முடியாது: இந்தியா நிராகரிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு பிரசாரம் செய்ய வந்தபோது மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுபாதக செயலை செய்ததாக விடுதலைபுலிகள் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டு சிலர் தண்டனையும் பெற்று வருகிறார்கள். ராஜீவ் கொலை சம்பவத்திற்கு தாங்கள்தான் காரணம் என்று விடுதலைப்புலிகள் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும் விடுதலைப்புலி களின் மனித வெடிகுண்டால் தான் அவர் கொல்லப்பட்டார் ... Read More
எங்கள் விடுதலைப் போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்: விடுதலைப்புலிகள் கோரிக்கை
ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நட்புக்கரம் நீட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் தயாராக இருப்பதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் நாளேட்டுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:- இலங்கையில் சிங்களப் படைகள் முன்னைய காலம் போல குழந்தைகள், பெண்கள் பாரபட்சம் பாராது பொதுமக்களைக் கொன்று அழிக்கக் தொடங்கியுள்ளது. இதனால் உலககெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் குறிப்பாகத் தமிழ்நாட்டில் வாழும் ... Read More
ராஜீவ் கொலை: விடுதலைப் புலிகள் வருத்தம்!
ராஜீவ் காந்தி கொலை ஒரு வரலாற்று துயரம். அந்த சம்பவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம் என்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பகிரங்கமாக விடுதலைப் புலிகள் ஒப்புதலும், வருத்தமும் தெரிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி மனித வெடிகுண்டு மூலம் ஸ்ரீபெரும்புதூரில் டந்த பொதுக் கூட்டத்தின்போது ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த ... Read More
மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க கொலை: மகிந்த அறிக்கை
சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாம் நிலை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க இன்று திங்கட்கிழமை பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பலியாகியுள்ளமை தொடர்பாக, சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: சிறிலங்கா இராணுவத்தின் இரண்டாம் நிலை கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க மீதான தாக்குதல், விடுதலைப் புலிகள் தங்களது வன்முறை மீதும், தற்கொலைத் தாக்குதல்கள் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையின் இன்னுமொரு எடுத்துக்காட்டு. ... Read More
நார்வே விலகினால் போரை தவிர்க்க இயலாது – புலிகள்!
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் (எஸ்.எல்.எம்.எம்.) இருந்து நார்வே விலக முடிவெடுக்கும் பட்சத்தில் இலங்கையில் போர் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும் என்று புலிகள் எச்சரித்துள்ளனர்! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கப் பட்டியலில் சேர்த்த ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் முடிவில் நடுநிலை வகித்த நாடுகளான ஃபின்லாந்து, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம் பெறக்கூடாது என்று விடுதலைப் ... Read More
இராக்கிலிருந்து ஜப்பான் படை வாபஸ்
இராக்கிலிருந்து தனது வீரர்களை ஜப்பான் அரசு திரும்பப்பெறத் துவங்கியுள்ளுது. இராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை ஜப்பான் ஆதரித்தது. சதாம் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு அங்கு அமைதியை நிலைநாட்ட சர்வதேச படைகளின் உதவியை அமெரிக்கா நாடியது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தங்களது ராணுவத்தை அனுப்பின. ஆனால் அங்கு அந்நிய படைகளுக்கு எதிராக தாக்குதல்கள் தொடருகின்றன. எனவே பிரான்ஸ் ... Read More
சுரங்கப்பாதை அமைத்து இஸ்ரேலின் ராணுவச் சாவடியை தகர்த்தது ஹமாஸ்
காசா சிட்டி பகுதியில், இஸ்ரேலியின் ராணுவச் சாவடியை, பூமிக்குள் சுரங்கப்பாதை அமைத்து திடீரென வெளிப்பட்டு தாக்கியது ஹமாஸ். இதில் ராணுவத்தின் 2 வீரர்கள் அங்கேயே இறந்தனர்; இஸ்ரேலிய ராணுவம் தந்த பதிலடி தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் 3 பேர் இறந்தனர். ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த மோதலை அடுத்து இஸ்ரேலின் பீரங்கிகள், கவச வாகனங்கள், ராணுவ டாங்குகள் காசா சிட்டிக்குச் சென்றன. ராணுவ ஹெலிகாப்டர்கள் பாலஸ்தீனப் பகுதி மீது பறந்து, ... Read More
ஈ.பி.டி.பியின் மூத்த உறுப்பினர் புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம், யாழ்ப்பாணத்தில் சம்பவம்
ஈ.பி.டி.பியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தற்போதைய மாநாகர சபை வேட்பாளரும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன அமைப்பின் பிரதித் தலைவருமான கனகரட்ணம் மாஸ்டர் என அழைக்கப்படும் மாணிக்கம் கனகரட்ணம் (வயது 70) என்பவர் புலிகளின் துப்பாக்கிக் சூட்டில் படு காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று மாலை 6.45 மணியளவில் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திக்கருகில் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்றுள்ளது. இவருக்கு தற்பொழுது யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பகுதியில் ... Read More
இலங்கையில் விடுதலைப்புலி மனித வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ தளபதி உள்பட 6 பேர் பலி
இலங்கை அரசு-விடுதலைப்புலிகள் இடையே போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இரு தரப்பினரும் அடிக்கடி மோதி வருகிறார்கள். இரு தரப்பையும் அமைதிப்படுத்த நார்வே அரசு முயற்சித்தது. இதற்காக ஜெனீவாவில் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் சரியான உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் 2-வது கட்ட பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் 2 மாதங்களுக்கு முன்பு ராணுவ தலைமை தளபதி சரத்பொன்சேகா மீது விடுதலைப்புலிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்கள். இதில் ... Read More
இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம்
இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி தீவில் நேற்று காலை பூகம்பம் ஏற்பட்டது.அதன் வீரியம் 5.8 ஆக இருந்தது.இதனால் கட்டிடங்கள் குலுங்கின என்றாலும் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ இல்லை.பூகம்பத்தின் மையம் கடலுக்கு அடியில் 72 கி.மீ ஆழத்தில் இருந்தது.சுலாவேசி தீவில் தான் சில நாட்களுக்கு முன்பு பலத்தமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவும் ஏற்பட்டது.இதில் 200 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது வழக்கம்.இங்குள்ள எரிமலைகளும் அடிக்கடி நெருப்புக்குழம்புகளை கக்கி மக்களை அச்சுறுத்தும்.
... Read More




