ஈ.பி.டி.பியின் தலைவரும்,அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வானொலி ஊடாக வழங்கும்……….
இரவில் நித்திரைக்குச் செல்லும் எமது மக்கள் விடிந்ததும் குருதியில் சரிந்து கிடக்கும் கொடுமையை தலைவிதி என்று கருத இடமில்லை. இது மக்களின் மகிழ்ச்சிக்கும் உயிர் வாழும் உரிமைக்கும் எதிரான திட்டமிடப்பட்ட சதி என்றே கருத இடமுண்டு.
எம் இனிய தமிழ் பேசும் மக்களே!
உலகெங்கும் பரந்து வாழும் எம் தாயக தேசத்து உறவுகளே!
உறுதி கொண்டு உழைக்கும் உயிரினும் மேலான எம் தோழர்களே!
உங்களுக்கு வணக்கம்!
பலியெடுக்கும் துப்பாக்கிகள் வெறிபிடித்து வீதிகளில் அலைகின்றன!
அவைகள் அப்பாவிக் குடிமக்களையும் ... Read More
வில்பத்தில் எட்டுப் பேர் கண்ணிவெடியில் சிக்கிப்பலி
வில்பத்து தேசிய சரணலயம் அருகே நிலக் கண்ணிவெடியில் சிக்கி எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனனர். இச்சம்பவம் நேற்றுக் காலை 10 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிய வருகிறது. தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாவிற்காக வந்தவர்களின் வாகனமே இவ்வாறு நிலக்கண்ணி வெடியில் சிக்கியுள்ளதாக தெரிய வருகிறது. எனினும் இச்சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு தாம் இதுவரை செல்ல முடியவில்லையென அனுராதபுரம், நொச்சியாகம பொலிசார் தெரிவித்துள்ளனர்
... Read More
இலங்கையில் யுத்தம் ஏற்படலாம்…….
இலங்கை அரசு, புலிகள் ஆகிய தரப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்த உதவுவதற்கு தாம் என்ன செய்கின்றோம் என ஆராய்வதை விடுத்து ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதிலே கண்ணாயிருக்கின்றனர் என புதுடில்லியில் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய சூழ்நிலை அபாயகரமானதாக இருப்பதாகவும் அதிகரித்து வரும் வன்முறைகள் முழுமையான யுத்தமாக மாற்றமடைவதைத் தடுப்பதற்கு சமாதானப் பேச்சுவார்த்தைகளை மிக விரைவாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் ... Read More
2ம் கட்ட ஜெனீவாப் பேச்சுவார்த்தைக்கு நோர்டிக் கூட்டம் வழிவகுக்கும்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் எதிர்வரும் 8ம் திகதி போர் நிறுத்த உடன்படிக்கையைக் கண்காணிக்கும் நோர்டிக் நாடுகளின் ஒஸ்லோ மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் நோர்வே உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்துள்ளது.
எதிர்வரும் 8ம் திகதி, 9ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக 8ம் திகதி முதல் மூன்று நாட்களுக்கான விஜயத்தை மேற்கொண்டு ஒஸ்லோவிற்கு வருமாறு அரசிற்கும் புலிகளுக்கும் நோர்வே அழைப்பு விடுத்துள்ளது.
நோர்வே அரசாங்கத்தின் இந்த அழைப்பு குறித்து ... Read More
பாரிய யுத்த நிறுத்த மீறலாகும்
மட்டக்களப்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் கண்ணிவெடியில் சிக்கி இரு சிறுவர்கள் நேற்றுப் பலியாகி உள்ளனர். நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான திகிலிவெட்டையில் உழவு இயந்திரம் ஒன்று கண்ணிவெடியில் சிக்கி அதில் பயணித்த இரு சிறுவர்கள் பலியாகியுள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கணபதி பாலு (வயது 12) விநாயகமூர்த்தி நந்தன் (வயது 15) ஆகிய சிறுவர்களே பலியானவர்களாவர். தம்பியப்பா மோகன் (வயது 13) விநாயகமூர்த்தி சுதாகரன் (வயது ... Read More
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பங்களிப்பு
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்களிப்பை அறிய ஆர்வமாக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் கூறியுள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் பற்றியும் மற்றும் யுத்த சூழலை நோக்கிய நகர்வுகள் பற்றியும் இந்தியாவுடன் தான் தீவிரமாக பேச்சுக்களை நடத்துவதாகவும் ரிச்சர்ட் பௌச்சர் கூறியுள்ளார்.
அமைதிப் பேச்சுக்களைவிட யுத்தத்தை நோக்கிய நகர்வுகளே இலங்கையில் தீவிரமடைந்துள்ளது. இந்த சூழ்நிலை மிகவும் ஆபத்தானது. ... Read More
இவ்வார இறுதியில் அமைச்சரவையில் மாற்றம்!
அமைச்சரவையில் இணைந்து கொள்ள மக்கள் விடுதலை முன்னணியினர் இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் புதிய அமைச்சரவையில் மக்கள் விடுதலை முன்னணியினரை சேர்த்துக் கொள்ள ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவக்கின்றன.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினை பலப்படுத்தும் பொருட்டு விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாகவும், அதனால் மக்கள் விடுதலை முன்னணியினர் அமைச்சரவையில் இணைந்து கொள்ள தீர்மானிக்கும் பட்சத்தில் இவ்வார இறுதியில் அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னர் அதற்கான சிபாரிசுப் பட்டியலை ஜனாதிபதியின் ... Read More
உரிமைகுரல் எழுச்சிப் பேரணி தொடர்பாக… புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு
எதிர்வரும் திங்கள்கிழமை பல ஐரோப்பிய நாடுகளிலும் கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் படுகொலை புலிகளால் உரிமைகுரல் எழுச்சி பேரணி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். இதில் பலகோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். இதற்கு முன்பும் பலபேரணிகளை நடத்தியுள்ளார்கள்.அமைதிபேரணி சமாதானபேரணி பொங்குதமிழ் எழுச்சிபேரணி எழுகதமிழ் எழுச்சிபேரணி என பலபேரணிகளை நடத்தி பலகோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் சமர்பித்தார்கள். இவர்கள் சமர்பித்த கோரிக்கைகளை எப்பொழுதாவது சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டதா? இவர்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள்(புலிகள்) செய்யும் ... Read More
புளொட் மத்தியகுழு உறுப்பினர் கடத்தல் தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை!
கடந்த 12.12.2005 அன்று முற்பகல் 11மணியளவில் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரான சின்னத்தம்பி கணேசலிங்கம் என்கிற பாரூக் அவர்கள் வவுனியா முருகனு}ர் பகுதியில் உள்ள மாணிக்கபுரத்தில் வைத்து புலிகளால் கடத்திச் செல்லப்பட்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன.
பாரூக் கடத்தப்பட்டு இரு மணித்தியாலங்களுக்குள் கடத்தியவர்களில் மூன்று புலி உறுப்பினர்கள் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு இன்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் பொலீசாரால் கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த ... Read More
வன்னிப் புலிகளின் தளபதி ரமணன் மீதான தாக்குதலை தமது விசேட பிரிவினரே மேற்கொன்டனர்! பிபிசியில் த.ம.வி.பு பேச்சாளர் தூயவன்!!
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான ரமணண் என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.
வன்னிப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதியான இவர், வவுணதீவு பிரதேசத்திலுள்ள தமது முன்னணி காவல் நிலைகளைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் சினைப்பர் தாக்குதலுக்கு இலக்கானதாக வன்னிப்புலிகள் அமைப்பின் அம்பாறை-மட்டக்களப்பு அரசியல் துறைப்பொறுப்பாளர் தயாமோகன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இலங்கை இராணுவமே பொறுப்பு என்றும் சம்பவமானது பாரிய போர்நிறுத்த மீறல் என்றும் அவரால் ... Read More
முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி
டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்,
தமிழ்நாடு முதலமைச்சர்,
சென்னை.
அன்பார்ந்த ஐயா,
இலங்கையின் இனப்பிரச்சினை!
மீண்டும் ஒருதடவை தங்களின் சாதனையை பாராட்டி வாழ்த்தி நீண்ட ஆயுளுடன் தாங்கள் வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.
குறளகம் தங்களுக்கு தந்த வரவேற்பின் போது இலங்கை இனப்பிரச்சினை சம்பந்தமாக தாங்கள் கூறிய வார்த்தைகள் இலங்கை வாழ் தமிழ் மக்களாகிய எமக்கு மனநிறைவை தருவதுமல்லாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வுக்காகிய ஓர் ஒளிக்கீற்று எமக்கு தென்படுகிறது. எம் மக்களின் விடிவிற்கு தங்கள் பங்களிப்பை தருமாறு ... Read More
பாகிஸ்தான் சமூகசேவைகள் நலத்துறை அமைச்சருடன் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!
பாகிஸ்தானின் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை மற்றும் விசேட கல்வி அமைச்சரான ஷொபெய்தா ஜலால் (obeida Jalal) அவர்களுக்கும், சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று கொழும்பு ஹோட்டல் இன்டகொன்டினென்ரலில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான சமூக சேவைகள் தொடர்பான வேலைத்திட்டங்கள் குறித்தும், சமூக அபிவிருத்தியை நோக்கமாக் கொண்ட விசேட கல்வித் திட்டங்கள் குறித்தும் பரஸ்பரம் கலந்தாராயப்பட்டது. இச்சந்திப்பை ... Read More
வன்னிப் புலிகள் மீதான தடையை மேலும் நீடித்துள்ள இந்தியா!
புலிகள் இயக்கத்தின் மீது விதித்திருக்கும் தடையை இந்தியா மேலும் நீடித்துள்ளதுடன், புலிகள் அமைப்புத் தொடர்ந்தும் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாகவே இருக்குமென்றும் கடந்த 14ம் திகதி இந்திய மத்திய அரசு விடுத்துள்ள அறிவித்தலைத் தொடர்ந்து, தமிழக அரசும் அதனையே மறு ஆணையாகப் பிறப்பித்துள்ளது.
புலிகள் இயக்கம் இலங்கையைச் சேர்ந்தது என்ற போதிலும், அதற்கு அனுதாபிகள், ஆதரவாளர்கள் மற்றும் முகவர்கள் என்போர் இந்திய மண்ணில் உள்ளனர். தமிழர்களுக்குத் தனி ஈழம் ... Read More
வன்னிப்புலிகளிடம் பெண் தற்கொலைத் தாரிகள்! கொழும்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்!!
புலிப் பயங்கரவாதிகள் பெண்களைத் தற்கொலைக் குண்தாரிகளாக்குவதையிட்டு இலங்கைப் பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். புலிகளது இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கைக்கு எதிராக சுமார் நு}ற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்றுக் கொழும்பில் சுலோக அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைப் பெண்கள் காங்கிரஸின் பேச்சாளர் டல்ஸி டி சில்வா கருத்துத் தெரிவிக்கும் போது, “பெண்களை அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களை இவ்வாறு தற்கொலைக் குண்டுதாரிகளாக பயன்படுத்துவதை எதிர்க்கின்றோம்” எனத் ... Read More
நோர்வே பிரதிநிதிகள் யாழ் விஜயம்!
நோர்வேயின் து}துவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் தலைமையிலான உயர் மட்டக்குழுவொன்று நேற்றுக்காலை யாழ். குடாநாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் கே.கணேஷ் உட்பட இராணுவ, கடற்படை உயர் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடிய இக்குழுவினர், யாழ். குடா நாட்டில் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
யாழ். அரசாங்க அதிபர் மற்றும் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவினரும் இக்குழுவில் இணைந்து, பல்வேறு பகுதிகளில் ... Read More
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான தாக்குதலை கண்டித்துள்ள அமெரிக்கா!
நொன் வயலன்ட் பீஸ்போஸ், சோவா, இன்டர் சோர்ஸ் ஆகிய மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் எவ்விதமான ஆத்திரமூட்டும் செயல்களிலும் ஈடுபடாத நிலையில், அவைகளுக்கு எதிரான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதால், இந்நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் காயமடைந்துமுள்ளனர் எனத் தெரிவித்திருக்கும் அமெரிக்கா, ஜனநாயக ரீதியில் இனங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், இந்த நிறுவனங்கள் செயற்பட்டு வந்தன. இத்தகைய நிறுவனங்கள் மீது தாக்குதல் நடாத்துவது வருந்தத்தக்கதும், கண்டிக்கப்;படவேண்டியதுமாகும்.
சகல தரப்பினரும் இத்தகைய வன்முறைகளைக் ... Read More
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான தாக்குதல்! ஜக்கியநாடுகள் கண்டனம்!
மூது}ரில் அரச சார்பற்ற நிறுவனங்களின் மீது இடம்பெற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளதுடன், இது ஒரு பயங்கரவாதமானதும், மோசமானதுமான தாக்குதலென்றும் ஐக்கிய நாடுகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
தாங்கள் இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன், மனிதாபிமான ரீதியில் உதவி வரும் இவ்வாறான அமைப்புக்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோருக்கு நிவாரண உதவிகளையும் மற்றும் பல்வேறு உதவிகளையும் புரிந்து வருகின்றது எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, இத்தாக்குதல் ... Read More
முஸ்லிம் இளைஞர் வன்னிப் புலிகளால் சுட்டுக்கொலை!
கோப்பாயில் நேற்றுக்காலை ஒரு முஸ்லிம் இளைஞர் வன்னிப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரான ஜமால்டீன் முஹம்மது ரொஷான் என்னும் இவர், அம்பாறையை சொந்த இடமாகவும், இலக்கடி லேன், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதுடன், இவர் ஒரு தமிழ் யுவதியை திருமணஞ் செய்து கோப்பாயில் வசித்து வந்துள்ளார் எனவும் தெரியவருகிறது.
நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த புலி உறுப்பினர்கள் இவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக எமது யாழ்ப்பாணச் ... Read More
முஸ்லிம் இளைஞர் வன்னிப் புலிகளால் சுட்டுக்கொலை!
கோப்பாயில் நேற்றுக்காலை ஒரு முஸ்லிம் இளைஞர் வன்னிப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரான ஜமால்டீன் முஹம்மது ரொஷான் என்னும் இவர், அம்பாறையை சொந்த இடமாகவும், இலக்கடி லேன், கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதுடன், இவர் ஒரு தமிழ் யுவதியை திருமணஞ் செய்து கோப்பாயில் வசித்து வந்துள்ளார் எனவும் தெரியவருகிறது.
நேற்றுக்காலை மோட்டார் சைக்கிளில் வந்த புலி உறுப்பினர்கள் இவரைச் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக எமது யாழ்ப்பாணச் ... Read More
வன்னிப் புலிகளின் முக்கிய தளபதி ரமணன் சினைப்பர் தாக்குதலில் பலி!
இன்று மாலை 5:40 மணியளவில் வவுணதீவுப் பகுதியில் இடம்பெற்ற சினைப்பர் தாக்குதலில் வன்னிப் புலிகளின் முன்னால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பாளரும், இராணுவத் தளபதியுமான ரமணன் பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பலியாகியுள்ள ரமணன் மட்-அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற நூற்றுக்கணக்கான படுகொலைகளுடன் நேரடியாக தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ் சினைப்பர் தாக்குதலை தமிழ் தேசியப் படையினர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலதிக செய்திகள் தொடரும்……
... Read More


