குடாநாட்டு கடலேரியில் மீன்பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கம்
யாழ்ப்பாணம் குடா கடலேரியில் கடற்றொழில் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக படைத்தரப்பினர் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் கடலேரிப் பகுதியில் கடற்றொழில் செய்வதற்கு நேரக் கட்டுப்பாடும், கடல் எல்லையின் தூரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது. இதனால், குருநகர், பாஷையூர், கொழும்புத்துறை, அரியாலை, காக்கைதீவு, மண்டைதீவுப் பகுதி கடற்றொழிலாளர்கள் கடந்த சில வருடங்களாக உரிய முறையில் தொழில் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. இதனால், இந்த மீனவர்களின் குடும்பங்களும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். ... Read More
நோயா துன்பம்? மருந்தா துன்பம்?? (தொடர்கட்டுரை –பகுதி-7)
அவர்கள் தொழிற்சங்கம் ஏற்படுத்தும் உரிமையைச் சட்டமாக்க வேண்டுமென்றும், மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வழங்கும் குடியேற்றத் திட்டங்களை உடனடியாக ரத்துச் செய்யவேண்டும் என்றும், விவசாயிகளுக்குக் குத்தகை ஏதும் இல்லாமல் விவசாய நிலங்களையும் மேய்சற்தரைகளையும் வழங்க வேண்டுமென்றும் போராடினர். இலங்கையர்கள் பிரித்தானியப் படைகளிலே பயிற்சிக்குப் போவதைத் தடைசெய்ய வேண்டுமென்றும், அப்படிப் பயிற்சிககுப் போவது ஏதிர்காலத்தில் சகோதரர்களை நரபலி வேட்டையாடவே வழி திறக்கும் என்றும் கேட்டுக் கொண்டனர். டி.எஸ் சேனனாயக்கா, ஜீ.ஜீ. பொன்னம்பலம் செல்வனாயகம் ... Read More
நோயா துன்பம்? மருந்தா துன்பம்?? (தொடர்கட்டுரை –பகுதி-6)
காலனி ஆதிக்கத்தின் கீழ் அதுவும் குறிப்பாக சுவெஸ்கால்வாய் வெட்டப்பட்டு அரபிக் கடலால் பயணம் செய்யும் அத்தனை கப்பல்களும் இலங்கையை மருவிச் செல்ல வேண்டியது பூகோள நிர்ப்பந்தமாகியது. இலங்கையோ கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே கேந்திரத்தில் இருந்தது. இதன் பிரகாரம் இலங்கைக்கும் மேற்குநாடுகளுக்குமிடையேயான பரஸ்பர பொருளாதார அரசியல் கலாச்சார தொடர் தாக்கங்களினால் இலங்கையின் படித்த ஒருசாரார் நவீன சிந்தனைகளை உறிஞ்சினர். இதன்பலாபலனாய் இலங்கையின் சமுதாய அபிருத்தியானது மற்றய ஆசிய நாடுகளிலும் முந்தியதாய் ... Read More
நோயா துன்பம்? மருந்தா துன்பம்?? (தொடர்கட்டுரை –பகுதி-5)
மலைநாடுகளில் கோப்பி தேயிலை றப்பர் பயிர்செய்கைக்காகவும் கீழ்ப்பிரதேசங்களில் றப்பர் தெங்கு பயிர்செய்வதற்காகவும் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படத் தொடங்கி தொடர்ந்து வௌ;வேறு காலங்களில் அது இருபதாம் நூற்றாண்டு முற்பகுதி வரைக்கும் பறிக்கப்பட்டுக் கொண்டே வந்தது. இதை அவர்கள் தரிசு நிலச் சட்டம் என்ற ஒரு சட்டப் போர்வையால் மறைத்து வெளிப்படையாகவே செய்தனர். இதனால் கட்டுக்கடங்காத நிலமற்ற விவாசாயிகள் தொகை பெருகியது. முன்னர் அரசர்களால் விவசாய அபிவிருத்திக்கென்று செய்யப்பட்ட குளங்கள் அணைக்கட்டுகள் ... Read More
நோயா துன்பம்? மருந்தா துன்பம்?? (தொடர்கட்டுரை –பகுதி-4)
வரலாற்றிலிருந்து இதுபோன்ற பல சமாந்திரங்களைக் கூற முடியும். 1887 இல் ரைஸ்சியாவில் செண்ட் பீட்டர்பேக் பல்கலைக் கழகத்தில் ஓர் இளம் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து முழு ரைஸ்சியாவிலும் மாணவர் போராட்டங்களும் தொழிலாளர் பேராட்டங்களும் தொடர்ந்து நொதித்து பல புரட்சிகர இயக்கங்களைத் தோற்றுவித்து ஈற்றில் 1905 இல் சார் ஆட்சியை வீழ்த்திய பின்பே ஓய்வுக்கு வந்தது. எழுபதிலே சிவகுமாரன் தற்கொலை செய்ததைத் தொடர்ந்தே மெல்ல நொதித்த ... Read More
நோயா துன்பம்? மருந்தா துன்பம்?? (தொடர்கட்டுரை –பகுதி-3)
கடந்த 30 வருட உள்நாட்டு யுத்தம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழீழத்திற்கான போராட்டம். ஆனால் உலக முதலாளித்துவத்தைப் பொறுத்தவரை தாம் தங்கு தடை கட்டுபாடின்றி நேரடியாக முதலிடுவதற்கேற்ற அரசியல் சூழலைக் கொணருவது தான். இலங்கையிலே தனியுடமையாக்கலால் ஏற்படும் பின்விளைவு பிரதிவிளைவுகளை நன்றேயறிந்த அனுபவம் வாய்ந்த முதலாளித்துவ அரசியல்வாதியான ஜெயவர்த்தனா சுதந்திர வர்த்தக வலயம் என்றதோர் திட்டத்திற்கு வந்தார். இதுவும்கூட மிக இலேசாக ஏற்படுத்தப் படவில்லை. 1977 இனக்கலவரத்தை மூட்டி, ... Read More
நோயா துன்பம்? மருந்தா துன்பம்?? (தொடர்கட்டுரை –பகுதி-2)
முப்பது வருடங்களுக்கு முன்னர் தெற்காசியாவில் முதன்முதலாக சுதந்திர வர்த்தக வலையம் என்ற பரிசோதனை சிறிலங்காவிலேயே ஆரம்பிக்கப்பட்டது. சிங்கப்பூர், பிலிப்பைன், தாய்வான், தாய்லண்ட் போல எதிர்புரட்சியைப் பூரணமாக்கி கொம்யூனிச வாதிகளையும் தொழிற்சங்க வாதிகளையும் தொழிலாளர் நலன் பேண் அரசியல்வாதிகளையும் கொன்று குவித்து ஜனநாயக உரிமைகள் அத்தனையையும் இல்லாமற் செய்து இலங்கையிலே சுதந்திர வர்த்தகத்தை ஏற்படுத்த முடியவில்லை. இலங்கையிலே 1959 இல் பண்டாரநாயக்காவைக் கொன்று சர்வாதிகார ஆட்சி ஏற்படுத்த ... Read More
நோயா துன்பம்? மருந்தா துன்பம்?? (தொடர்கட்டுரை –பகுதி-1)
இலங்கை முதலாளித்துவ இராஜபக்ஸ்ச அரசாங்கம் தொப்பிக்கலை வெற்றியைச் சொன்ன மறுகணமே திருகோணமலையில் 1600 ஏக்கர் நிலத்தை அரச மற்றும் தனியார் பொருளாதார நிறுவனங்களுக்கு வழங்கி ஒரு பொருளாதார வலயைத்தை உண்டு பண்ணப் போவதாக 15 யூலை 2007 சன்டேஒவ்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கூற்றை (BOI) முதலீட்டுத் திணைக்களப் பொது முகாமையாளர் எல். டிக்மன் கூறியுள்ளார். அங்கே 15 மில்லியன் ரூபா தொடக்கம் 30 மில்லியன் ரூபாவரை ... Read More







