முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபா நிவாரண உதவி!
வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக முழுமையாகப் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபா வழங்கவுள்ளதாகவும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் உதவிகளை வழங்க உள்ளதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கம்பஹா களுத்துறை மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறைபாடுளை ஆராயும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் அப்பகுதி கிராம சேவகர்களின் ... Read More
செய்மதி இயந்திரம் கொள்ளை – சந்தேகநபர் கைது!
தங்காலை மீன்பிடித்துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றின் உபகரணத்தை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
படகில் பொறுத்தப்பட்டிருந்த 45 ஆயிரம் ரூபா பெறுமதியான செய்மதி இயந்திரம் ஒன்றையே சந்தேக நபர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்தார். கொள்ளையிடப்பட்ட செய்மதி இயந்திரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். ... Read More
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் நூறு பேருக்கு தனியார் துறையில் தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆடை இயந்திர தொழிற்பாட்டாளர்கள் என்ற அடிப்படையில் ஆடை இயந்திர துறையில் பயிற்சி பெற்ற நூறு பேரும் எதிர்வரும் 31 ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இரத்மலானையிலுள்ள ட்ரைஸ்டார் அபரல்ஸ் நிறுவனத்துடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
... Read More
ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்க தொழில்நுட்ப உபயோகம் அவசியம்
தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சானது விதாதா வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் தொழில் முயற்சியாளர்களை நாடெங்கிலுமிருந்து உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப அறிவை சகல கிராமங்களுக்கும் எடுத்துச் சென்று ஏற்றுமதி உற்பத்தியில் சர்வதேசத்துடன் போட்டியிடும் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதே அமைச்சின் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் 256 விதாதா வள நிலையங்களை உருவாக்கி 6 000 ... Read More
உலக சாதனைகள் படைத்த பரீட் நசீர் காலமானார்
எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பரீட் நசீர் வயது 56 நேற்றுக் காலமானார். புத்தளத்தில் காலமான இவர் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவராவார். வேக நடை யாழ்பாணத்தில் இருந்து அம்பாந்தோட்டைக்கு சைக்கிளைப் பின்புறமாகச் செலுத்தியமை 500 நச்சுப்பாம்புகளுடன் இருந்தமை 72 மணித்தியாலங்களாக தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை 3 நாட்களாக தொடர்ச்சியாக ஒற்றைக் காலில் நின்றமை பூல் டூம் நடனம் நான்கு நாட்களாக தொடர்ச்சியான நடனம் 72 மணி நேரமாக ... Read More
திருநெல்வேலி புதிய கொலணி குடியேற்ற மக்கள் தமது குடியிருப்பு கோரிக்கை சம்பந்தமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு!
நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கீழ் திருநெல்வேலி ஜே 114 புதிய கொலணி மற்றும் பாரதிபுலம் குடியேற்றத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் தமது குடியிருப்பு காணி உரிமம் கோரிக்கை தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இன்று (25) காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சுப் பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் ஜே 114 கிராம உத்தியோகத்தர் ... Read More
சிதைவுற்ற எமது பிரதேசங்களை கட்டியெழுப்ப அனைவரும் உறுதியுடன் உழைக்க வேண்டும் – சில்வேஸ்த்திரி அலன்ரின் உதயன் கன்னியுரையில் தெரிவிப்பு
கௌரவ பிரதிச் சபாநாயகர் அவர்களே இந்த அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்திலே கலந்து கொண்டு எனது கன்னியுரையை நிகழ்த்துவதிலே நான் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அதேநேரம் நான் இந்தப் பாராளுமன்றத்திற்கு வருவதற்குகந்த ஏற்பாடு செய்த கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் அத்தோடு என்னை இந்த உயரிய ஆசனத்திலே அமர்த்துவதற்கு எனக்கு ஆதரவு தெரிவித்துப் பல வழிகளிலும் பாடுபட்ட எமது பிரதேச மக்களுக்கும், குறிப்பாக யாழ் மாவட்டத்திலே வாழ்;ந்து கொண்டிருக்கின்ற அனைத்து ... Read More
நிரந்தர நியமனத்தை பெற்றுத்தரக்கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள்.
தமக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத்தரும்படி இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் ஆகியவற்றின் யாழ். பிராந்திய தொண்டர்களும் யாழ். மாவட்ட பதில் உப அஞ்சல் அதிபர்களும் இன்றைய தினம் (24) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அமைச்சர் அவர்களின் யாழ். அமைச்சுப் பணிமனைக்கு வருகை தந்த இவர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக தனித்தனியாக வேண்டுகோள்களை முன்வைத்தனர். ... Read More
விவேகமும் ஆற்றலும் உள்ள நிர்வாகத்தைத் தெரிவு செய்யுங்கள் – ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர்
நலிவடைந்துள்ள எமது வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வை மேம்படுத்தக் கூடிய வகையில் நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தக் கூடிய விவேகமும் ஆற்றலும் உள்ள நிர்வாகத்தைத் தெரிவு செய்வதன் ஊடாகவே கடற்றொழில் சங்கங்களின் அங்கத்தவர்கள் விரைவான பயனை அடைய முடியும் என ஈபிடிபியின் வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவும் பொதுக்கூட்டமும் கடந்த வெள்ளிக்கிழமை (21) பருத்தித்துறை கற்கோவளம் கிராம ... Read More
தொழிற்சங்கமானது தொழிலாளர்களுக்கு சரியான வழிகாட்டியாக விளங்க வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் யாழ். மாநகரசபை தொழிற்சங்க நிர்வாக பிரதிநிதிகள் தமது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் விடயதானங்கள் சம்பந்தமாக இன்றையதினம் (24) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அமைச்சுப் பணிமனையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின்போது தொழிற்சங்க நிர்வாக பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய அமைச்சரவர்கள் தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு சரியான வழிகாட்டியாக ... Read More
மன்னாரில் கிளேமோர் மீட்பு!
மன்னார் மூர் வீதி காட்டுபல்லி பகுதியில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு கிலோ நிறையுடைய கிளேமோர் குண்டு ஒன்றை நேற்று மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். அப்பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலையடுத்து கிளைமோர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. இக் கிளேமோர் குண்டு பொலித்தீன் பற்றரிகள் பொருத்தப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவ்விடத்துக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்தக் கிளைமோர் குண்டை செயலிழக்கச் செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
... Read More
பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற்று முகாம்களுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் – ஊடக அமைச்சர் கெஹலிய
வவுனியாவில் உள்ள நலன்புரி முகாம்களுக்குச் செல்கின்றமை தொடர்பான நடைமுறையை பின்பற்றத் தவறியமையாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அம்முகாம்களுக்குள் செல்ல முடியாமல் போனது என்று ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். முகாம்களுக்கு செல்வது தொடர்பில் ஏற்கனவே ஒரு நடைமுறை இருப்பதாகவும் அதை பின்பற்றி யார் வேண்டுமானாலும் முகாமுக்குச் செல்லலாம் என்றும் முகாம்களுக்குப் போகும் முன் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று கூறிய ... Read More
இந்தியாவில் சரணாகதியடைந்துள்ள தமிழர்கள் விரைவில் மீள் குடியேற்றப்படவுள்ளனர்!
இந்தியாவில் சரணாகதியடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் விரைவில் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்படவுள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் யுத்தம் காரணமாக படகுகள் மூலம் தென் இந்தியாவில் சரணாகதியடைந்த குறித்த இலங்கையர்கள் நீண்ட காலமாக அகதி முகாம்களில் தங்கியிருக்கின்றனர். குறித்த அகதிகளை தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற்றுவது தொடர்பிலான திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ... Read More
போலி டொலர் நாணயத்தாளைப் பயன்படுத்திய நபர் கட்டுநாயக்கவில் கைது
போலி அமெரிக்க டொலர் நாணயத்தாளைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட முயற்சித்த நபரை கட்டுநாயக்க விமானநிலையப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 100 அமெரிக்க டொலர் பெறுமதியான போலி நாணயத்தாள் ஒன்றைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபட குறித்த நபர் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமது பயணப் பொதிகளின் மேலதிக நிறைக்கான பணத்தை செலுத்த முற்பட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் ... Read More
வவுனியாவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்
வவுனியா வைத்தியசாலைக்கு எதிரில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். மஞ்சள் கடவையில் அவர் வீதியை கடக்க முயற்சித்த போது அந்த வீதியில் சென்ற கனரக வாகனம் ஆசிரியை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. நெளுக்குளம் சாம்பல் தோட்டம் வீடமைப்புத் திட்டத்தைச் சேர்ந்த 29 வயதான எம். தவமணி என்பரே கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் வவுனியா பொலிஸார் ... Read More
பாதிக்கப்பட்டோருக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள்
கம்பஹா மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ்மக்களே இந்த உதவியை வழங்கியுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதற்காக பல பாரவூர்திகளில் சேகரிக்கப்பட்ட உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுதி ஒன்று கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யு ஏ.டீ.பி லக்ஸ்மனுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அன்புடன் கம்பஹா ... Read More
வெள்ளப் பெருக்கு காரணமாக 22 பாடசாலைகளுக்கு விடுமுறை!
மேல் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் மாணவர் வரவு குறைவு காரணமாக 22 பாடசாலைகள் மூடப்பட்டதாக மேல் மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.நிலைமையைக் கவனத்திற்கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மேல் மாகாணத்தின் பதினொரு கல்வி வலயங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில பாடசாலைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாகத் தங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிரவும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அப்புறப்படுத்தப்படும் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
... Read More
சிசுவின் சடலம் மீட்பு
சாவகச்சேரிப் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசுவின் சடலமொன்று கிணற்றில் இருந்து சாவகச்சேரி பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிசுவின் கொலைக்குக் காரணமான பெண்ணைத் தேடி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
... Read More
தாய்லாந்து சிறீ நாகதுர்க்காதேவி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் தொடர்பான அறிவித்தல்..!!
தாய்லாந்து ரங்சிட் பத்தும்தானி கொங்சி பங்கொக் என்னுமிடத்தில் இலங்கைத் தமிழர்களின் ஒத்துழைப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறீ நாகதுர்க்காதேவி அம்மன் ஆலய மகா கும்பாவிஷேக நிகழ்வானது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (23.05.2010) நடைபெறவுள்ளது என்பதனை மிகவும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். இவ்அறிவித்தலை ஏற்று இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் எமது ஆலயத்தில் இன்னும் சில தேவைகள் ப+ர்த்தியாகாதுள்ளன. எனவே மனமுவந்து எமது ஆலயத்திற்கு உதவிசெய்ய விரும்பும் பக்தஅடியார்கள் எமது ... Read More
யாழ். மாநகரசபைக்கு நடமாடும் கழிப்பறை தொகுதியை எக்ஸ்போ லங்கா நிறுவனம் அன்பளிப்புச் செய்துள்ளது.
தனியார் வர்த்தக நிறுவனமான எக்ஸ்போ லங்காவினால் யாழ். மாநகரசபைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட நடமாடும் கழிப்பறைத் தொகுதியினை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் (21) பார்வையிட்டார். அவசிய தேவைகளின்போது பொது இடங்களில் மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும் நடமாடும் கழிப்பறைத் தொகுதியானது யாழ். மாநகர முதல்வர் திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களின் தொடர் முயற்சிகளையும் வேண்டுகோளையும் அடுத்து மேற்படி வர்த்தக நிறுவனத்தினால் யாழ். ... Read More



















